Advertisment

நள்ளிரவில் தீ விபத்து- அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

Midnight fire incident - shock at government hospital

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

Advertisment

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இரண்டாவது மாடியில் நேற்று நள்ளிரவுதிடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த நோய் அனைவரும் பாதுகாப்பாக வெளியே கொண்டுவரப்பட்டனர். அனைவரும் பத்திரமாக வெளியே கொண்டுவரப்பட்டதால் உயிர்ச்சேதம் எதுவும் இல்லாமல் தவிர்க்கப்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர்.

Advertisment

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது. மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து அதிர்ச்சியைஏற்படுத்த உடனடியாக மருத்துவமனையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தீ விபத்தால் ஏற்பட்ட புகையால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். நோயாளிகளை காவலர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். சிலர் ஸ்ட்ரக்சர்கள் இல்லாததால் போர்வையில் வைத்து தூக்கிச் செல்லும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe