Advertisment

நள்ளிரவில் குடிசை வீட்டில் புகுந்த கட்டு விரியன்... சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்

In the middle of the night, a snake entered the cottage house... Tragedy befell the brothers and boys

Advertisment

திருவள்ளூரில் குடிசை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சகோதரர்களைபாம்பு கடித்ததில் ஒரு சிறுவன் உயிரிழந்த நிலையில் மற்றொரு சிறுவன் ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஆரணியை சேர்ந்த கூலித் தொழிலாளி பாபு என்பவர் குடிசை வீட்டில் வசித்து வந்தார். இவரது மகன்கள் ரமேஷ் மற்றும் தேவராஜ் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று இரவு வழக்கம்போல் அவர்கள் தங்களது குடிசை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது வீட்டுக்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பு சிறுவர்களை கடித்துள்ளது. சிறுவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துபாம்பை அடித்துக் கொன்றதோடு கடிபட்ட சிறுவர்களை திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

nn

Advertisment

இதில் அண்ணன் ரமேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் தம்பி தேவராஜ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாம்பு கடித்து சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

incident sad thiruvallur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe