ADVERTISEMENT

மைக்ரோ ஜெராக்ஸ் பிட் விவகாரம்: தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த 15 ஆசிரியர்கள் பணியில் இருந்து விடுவிப்பு!

06:47 AM May 21, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் மே 5- ஆம் தேதி பிளஸ்- 2 பொதுத்தேர்வு தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மே 16, 17- ஆம் தேதிகளில் பிளஸ்- 1, பிளஸ்- 2 தேர்வு நடந்தது. கொல்லிமலை அருகே, ஒரு குறிப்பிட்ட ஜெராக்ஸ் கடையில் மாணவ, மாணவிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன்குமார் மற்றும் அலுவலர்கள் சந்தேகத்தின்பேரில், குறிப்பிட்ட அந்த ஜெராக்ஸ் கடைக்குச் சென்று விசாரித்தனர்.

அந்த கடையில் இருந்து மாணவர்கள் பலர், தேர்வுக்கூடத்திற்கு எடுத்துச் செல்வதற்காக முக்கிய வினாக்களுக்கான விடைகளை மைக்ரோ ஜெராக்ஸ் பிட் ஆக தயாரித்து எடுத்துச் செல்வதற்காக வந்திருப்பது தெரிய வந்தது. கடை அருகில் இருந்தும் ஏராளமான மைக்ரோ ஜெராக்ஸ் காகிதங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.

இதையடுத்து குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் தேர்வுக்கூடத்தில் இருந்தே மாணவ, மாணவிகளிடம் இருந்து மைக்ரோ ஜெராக்ஸ் பிட் காகிதங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பணியின்போது அலட்சியமாக இருந்ததாக கொல்லிமலை, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் பணியாற்றி வந்த தேர்வறை கண்காணிப்பாளர்கள் 15 பேரை உடனடியாக அப்பணியில் இருந்து நீக்கப்பட்டனர். தேர்வுத்துறை இணை இயக்குநர் அறிவுறுத்தலின் பேரில், நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ''மைக்ரோ ஜெராக்ஸ் பிட் காகிதங்கள் பிடிபட்டதை அடுத்து, தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கி இருக்கிறோம்.

தேர்வுகள் துவங்கும் முன்பே மாணவ, மாணவிகளிடம் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், அறை கண்காணிப்பாளர்கள் முழுமையாக சோதனை நடத்திய பிறகே தேர்வு அறைக்குள் அனுமதிக்க வேண்டும். கொல்லிமலையில் தேர்வர்களை சோதனை செய்வதற்காக பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்,'' என்றனர்.

மைக்ரோ ஜெராக்ஸ் பிட் பிடிபட்ட விவகாரத்தில் அறை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 15 ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் பணியில் இருந்து விடுவிக்கப்ப்டட சம்பவம் பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT