மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆர்வலர் தீஸ்தா செடல்வாட், ஐ.பி.எஸ்.ஸ்ரீகுமார், ஊடகவியலாளர் ஜூபைர் ஆகியோரை கைது செய்ததைக் கண்டித்தும், பாஜகவைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.