திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலையின், தலையில் காங்கிரஸ் கட்சியின் துண்டு விரிக்கப்பட்டிருந்தது.
எம்.ஜி.ஆர். சிலையின் தலையில் காங்டிகிஸ் கட்சியின் துண்டு இருப்பதை அவ்வழியே சென்ற பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் பார்த்துக்கொண்டே சென்றனர். இந்த நிலையில் அந்த வழியாக வந்த சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவஹர்லால் நேரு, வாகனத்தை நிறுத்தி, எம்.ஜி.ஆர் சிலையின் தலையின் மேல் போடப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் துண்டை அகற்றிவிட்டுஅங்கிருந்து புறப்பட்டார்.