ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக பாமக சார்பில் சிதம்பரத்தில் விழிப்புணர்வு பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. பாமகவின் இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் எம்பி பங்கேற்று பேசுகையில் மத்திய அரசு காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி கொடுத்து இந்தப் பகுதியை பாலைவனமாக மாற்ற துடிதுடித்து வருகிறது. அதனை நிறைவேற்ற தமிழக அரசு செயல்படுகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தமிழகத்தில் அதிக இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இந்த வேதாந்தா நிறுவனம் பாரதிய ஜனதா கட்சிக்கு அதிக அளவில் நிதி வழங்கியுள்ளது. மோடி என்ற எஜமானுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிமை வேலை செய்து வருகிறார். அதனால் மக்களை அழித்து கொண்டுவரும் திட்டத்தை இதுவரை எதிர்க்காமல் மோடிக்கு ஆமாம் சாமி போடும் வேலையில் ஈடுபட்டு உள்ளார்.
தமிழகத்தில் உயர்ந்த பதவியான செயலாளர்கள் 90 சதமான ஐஏஎஸ் அதிகாரிகள் அமைச்சர்களுக்கு ஊழல் செய்வது எப்படி என்று கற்றுக் கொடுத்து ஊழல்வாதியாக திகழ்ந்து வருகிறார்கள்.
கலைஞர் ஊழல்வாதி என்று கட்சியை விட்டு வெளியே வந்த எம்ஜிஆர் பல லட்சம் ஊழல்வாதிகளை உருவாக்கிவிட்டு சென்றுள்ளார். அவருக்கு நூற்றாண்டு விழா தேவையா?
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்கப்பட்டு தனி சட்டம் இயற்ற வேண்டும். அண்ணாமலை பல்கலைகழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. சிபிஐ விசாரணை வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றத்திற்கு செல்வோம். இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்த கொலைகார ராஜபக்சே பிரதமர் ஆவதற்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இந்திய அரசு ராஜபச்சேவுக்கு துணை நிற்கிறது. தமிழர்களை கொன்று குவித்ததில் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் ஒரே கொள்கைதான் என பேசினார். கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மணி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.