அதிமுக கட்சி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், 51 ஆம் ஆண்டு விழாவை அதிமுகவினர் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஒற்றைத் தலைமை பதவிக்காகஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா என மூன்று அணிகளாக பிரிந்து இருக்கின்றனர். இத்தகைய செயல்களால்அதிமுக தொண்டர்களிடம்மூத்த தலைவர்கள்வெறுப்பை சம்பாதித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அதிமுக கட்சியின்51ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரத்தில்அதிமுக 51 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டுஅதிமுக தொண்டர்கள்எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்துமரியாதை செலுத்தியுள்ளனர்.
அப்போதுஎம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தகுடியாத்தம் முன்னாள் நகர செயலாளர் புலிகேசவன் என்பவர் திடீரென எம்.ஜி.ஆரை வணங்கியபடிஇந்தக் கட்சியை ஒன்றாக்கி ஓபிஎஸ், இபிஎஸ்க்குநல்ல புத்தியைக் கொடுங்க தலைவா. இனிவரும் காலங்களில் தேர்தலில் உங்கள் எண்ணமும், அம்மாவின் எண்ணமும் நிறைவேற வேண்டும். இந்த இயக்கம் அழியாமல் இருக்க இருவருக்கும் நல்ல புத்தியைக் கொடுத்துகட்சியைக் காப்பாற்ற சொல்லுங்க தலைவா என்று கதறி அழுதார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.