Advertisment

எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா - பஸ் அதிபர்கள் அதிருப்தி!

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் நிறைவு விழா மாநில தலைநகரான சென்னையில் வரும் 30 ஆம் தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கு பேருந்துகளை அனுப்புமாறு அதிமுகவினர் , அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதால் பல மாவட்டங்களில் உள்ள பஸ் அதிபர்கள் அதிருப்தியில் இருக்கிறார்க்ள.

Advertisment

edapadi

பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழகத்தில் உள்ள 31 மாவட்டங்களில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்ட அளவில் அமைச்சர் தலைமையில் அரசு செலவில் நடைபெற்றது. முதலில் நடந்த விழாக்களில் கூட்டம் கூடாததால் பள்ளி, கல்லூரி மாணவர்களை கட்டாயப்படுத்தி அழைத்துவந்து அமரவைக்கப்பட்டார்கள். அதன் பின்னர் விவகாரம் நீதிமன்றம் வரை செல்லவே தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டிப்புடன் குட்டு வைத்தது. அதிமுக தொண்டர்களை அழைத்துசெல்ல பள்ளி, கல்லுரி வாகனங்கள் மற்றும் தனியார் பேருந்துகளை கட்டாயப்படுத்தி மிரட்டி இலவசமாக ஆளும் தரப்பு பயன்படுத்தி கொண்டது.

Advertisment

edapadi

சென்னையில் வரும் ஞாயிறு அன்று நடைபெறும் நூற்றாண்டு விழாவில் ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களை வரவைப்பது என்று சில தினங்களுக்கு முன்னர் முதல்வர் எடப்பாடி கூறியிருந்தார். அதிமுக வட்டாரத்தில் ஒவ்வொரு வட்டசெயலாளரும் 200 பேரை அழைத்து வரவேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. மாவட்டத்திற்கு 30-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வர வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. தனியார் சுற்றுலா வண்டிகளை சென்னைக்கு அதிமுகவினரை அழைத்துசெல்ல கட்டாயப்படுத்துவதாக செய்திகள் கிடைத்தது.

edapadi

பஸ் அதிபர்கள் சிலர் நம்மிடம் நிலைமையை விவரித்தனர் " தனியார் சுற்றுலா பேருந்துகளுக்கு வருடத்தில் சில மாதங்கள் மட்டும்தான் சீசனாகும். தற்போது பள்ளி விடுமுறை, புரட்டாசி மாதம் என்பதாலும் முன்கூட்டியே கோவில்கள், சுற்றுலாத் தளங்கள் செல்ல அதிக அளவில் தனியார் பேருந்துகள் புக்கிங் செய்யப்பட்டு இருக்கிறது. சுற்றுலா செல்லும் சில தினங்களுக்கு முன்னர் பர்மிட் வாங்குவது வழக்கம். இந்த வாரம் சுற்றுலா செல்ல பர்மிட் கேட்டு விண்ணப்பித்த போது எந்த வண்டிக்கும் பர்மிட் வழங்க கூடாது என்று அமைச்சரிடம் உத்தரவு வந்திருப்பதாகபோக்குவரத்து அலுவலகங்களின் இருக்க கூடிய அலுவலர்கள் சொல்கிறார்கள். இதனால் தொழில் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து அதிக அளவில் திருப்பதிக்கு மக்கள் செல்வதால் முன்கூட்டியே தரிசன டிக்கெட்கள் பதிவு செய்து இருந்ததால் தற்போது அதை ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

அமைச்சர்களின் சொந்த ஊர், அதிமுக எம்.எல்.ஏக்கள் இருக்க கூடிய ஊர்களில் பேருந்து அதிபர்களை தொடர்ந்து மிரட்டி வருகிறார்கள். கோவை, ஈரோடு ,சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிக அளவில் ஆட்களை கூட்டி வர வேண்டும் என்பதால் அதிக தனியார் பேருந்துகள் வர சொல்லப்பட்டு இருக்கிறது. ஒரு மாதங்களுக்கு முன்னரே அட்வான்ஸ் பணம் வாங்கியதை எல்லாம் சங்கடத்துடன் திருப்பி தர வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஒரு பக்கம் டீசல் விலை அதிகரித்து கொண்டே செல்கிறது, சீசன் நேரங்களில் கட்டாயப்படுத்தி பேருந்துகளை வர வைப்பது எந்த வகையில் சரியாக இருக்க முடியும்" என்றனர்.

admk travels
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe