Published on 08/11/2018 | Edited on 08/11/2018

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 1,457 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுக்க நடைபெற்றது. பல்வேறு இடங்களில் விழா நடத்தப்பட்டது. முதலமைச்சரின் ஆணைப்படி, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்க முதலமைச்சர் ஆணையிட்டார். அதன்படி, தமிழ்நாடு முழுக்க இதுவரை 1,457 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 219 கைதிகளை இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சிறைத்துறை தகவல்.