/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/lialalaaa.jpg)
மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி. சக்கரபாணியின் மகள் லீலாவதி (வயது 72). உடல்நலக்குறைவால்மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர், சிகிச்சைப் பலனின்றி இன்று (26/11/2021) அதிகாலை 02.00 மணியளவில் உயிரிழந்தார். மறைந்த லீலாவதி தனது சித்தப்பாவான எம்ஜிஆருக்கு தனது சிறுநீரகத்தைத் தானமாக அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லீலாவதி மறைவுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டனர். அதேபோல், சசிகலா, அமமுகபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது, அவருக்குத் தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை அளித்து எம்ஜிஆரின் புனர்வாழ்வுக்குக் காரணமாக இருந்தவர் லீலாவதி என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)