நடிகரும், அதிமுகவின் நிறுவனரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களான ஒ.பி.எஸ். மற்றும். இ.பி.எஸ். சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மேலும், கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக கொடியை ஏற்றி, அதிமுக தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.