Published on 18/01/2022 | Edited on 18/01/2022

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அவருடைய உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும், அன்னதானங்கள் செய்தும் அதிமுகவினர் கொண்டாடினர்.
அதன் ஒருபகுதியாக திருச்சி நீதிமன்ற வளாக சாலையில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதில் தெற்கு மாவட்டம் சார்பில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார் மலர்தூவி மரியாதை செலுத்தி, அதிமுக கொடியேற்றி, அன்னதானம் வழங்கி நலத்திட்ட உதவிகள் செய்தார். நிகழ்ச்சியில் திருவெறும்பூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் கும்பகுடி கோவிந்தராஜ், பொன்மலை பகுதி செயலாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.