திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியையொட்டி இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். தரப்பில் பிரியாணி வழங்குவதில் போட்டோ போட்டி ஏற்பட்டது. இ.பி.எஸ். தரப்பினர் வெஜிடபிள் பிரியாணி வழங்கியதால், ஓ.பி.எஸ். தரப்பினர் முட்டை பிரியாணி வழங்கினார்கள்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் எம்.ஜி.ஆர். விசுவாசிகள் வேறு வேறாக பிரிந்து போட்டி போட்டுக் கொண்டு பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கிய நிகழ்வு வத்தலகுண்டில் பரபரப்பை உருவாக்கியுள்ளது. ஆனால் எம்.ஜி.ஆர். ரசிகர்களோ மக்கள் திலகம் இருந்த போதும் சோறு போட்டாரு மறைந்த பிறகும் சோறு போடுறாரு என்று நெகிழ்ச்சியுடன் பிரியாணி சாப்பிட்டு சென்றனர்.