Skip to main content

எம்.ஜி.ஆருக்கு மன்னையில் சிறை.. சென்னையில் விழாவா? 

Published on 30/09/2018 | Edited on 30/09/2018

 

mgr


 

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் இன்று மாலை நடக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் இருந்து அரசுப் பேருந்துகளில் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர் எம்ஜிஆரின் விசுவாசிகள்.
 


ஆனால் மன்னார்குடியில் அதிமுக அலுவலகம் எதிரில் கோபாலசமுத்திரம் 4ம் வீதியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு எம் ஜி ஆருக்கு சிலை அமைக்கப்பட்டது. அதிமுக மா.செ.வும் அமைச்சருமான ஆர்.காமராஜ் பல இடங்களிலும் வசூல் செய்து சிலையை கொண்டு வந்து வைத்ததோடு சாக்கு சுற்றி கட்டப்பட்டு மழை வெயிலில் 5 ஆண்டுகளாக காத்திருக்கிறது. 


பிறகு சிலை திறப்பில் தீவிரமாக இருந்தவர்கள் பிரிந்து தினகரனின் அ.ம.மு.க. பக்கம் போய் விட்டனர். அதன் பிறகு முதல்வர் ஈ.பி.எஸ்., துணை முதல்வர் ஒ.பி.எஸ் திருவாரூர் வரும் போது திறக்கப்படலாம் என்று எதிர்பாத்தார்கள் ர.ர.க்கள் திறக்கவில்லை.

 

mgr


இந்த நிலையில் தான் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதைப் பார்த்த எம்.ஜி.ஆர். விசுவாசி ஒருவர், எம்.ஜி.ஆர் சிலைக்கு மன்னையில் சிறை சென்னையில் நூற்றாண்டு விழாவா என்று சிறைபட்டிருக்கும் சிலை முன்பு பதாகை கட்டி வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதைப் பார்த்த அ.ம.மு.க.வினர் எம்.ஜி.ஆர். படத்தையும் பெயரையும் பெயரளவுக்கே பயன்படுத்தி வருகிறார்கள் அ.தி.மு.க.வினர். அதனால இந்த சிலை அமைக்க எங்கள் பங்கும் அதிகம் உள்ளது. அதனால விரைவில் எம்.ஜி.ஆர் சிலையை மீட்டு சிலை திறப்பு போராட்டம் நடத்துவோம். இந்த போராட்டத்தில் துணைப் பொதுச் செயலாளர் தினகரனும் கலந்துகொள்வார் என்றனர்.
 

சார்ந்த செய்திகள்