Skip to main content

மேட்டூர் உபரி நீரை அந்தியூர் பகுதிக்கு திருப்ப வேண்டும்... -கம்யூனிஸ்ட் மாநாட்டில் தமிழக அரசுக்கு கோரிக்கை!

Published on 10/06/2020 | Edited on 10/06/2020

 

  Mettur surplus water - Communist Conference - TN Govt

 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தியூர் தாலுகா மாநாடு 9 ந் தேதி அந்தியூரிலிருந்து, பர்கூர் மலை செல்லும் வழியில் உள்ள வனம் என்ற பகுதியில் நடைபெற்றது. அந்த வனத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்து மாவட்ட செயலாளர் டி.எ. மாதேஸ்வரன் மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நிலை குறித்தும், அமைப்பு நிலை குறித்தும் மாநிலக்குழு உறுப்பினர்களான பழங்குடி மக்கள் சங்க வி.பி. குணசேகரன், மோகன் குமார் ஆகியோர் விளக்கிப் பேசினர்.


இந்த மாநாட்டிற்கு அந்தியூர் தாலுகா முழுவதுமிருந்து கம்யூனிஸ்ட் தோழர்கள் பங்கேற்றார்கள். மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது இதில் அந்தியூர் தாலுகா கம்யூனிஸ்ட் கட்சி செயலாளராக வழக்கறிஞர் எம்.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இவர் மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனின் ஜூனியர். மேலும்15 பேர் கொண்ட தாலுகா குழுவும் தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில் பவானி வட்ட செயலாளர் கோபால், பவானி நகர செயலாளர் வழக்கறிஞர் பாலமுருகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பாலதண்டாயுதம், சந்திரசேகர், வழக்கறிஞர் எல்.சிவராமன் தொழிற்சங்க தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பிறகு மாநாட்டில், “அந்தியூர் தாலுகா மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக, கிடப்பில் போடப்பட்டு இருக்கிற, மேட்டூர் அணையிலிருந்து உபரி நீரை ஏரி, குளம், குட்டைகளுக்கு கொண்டு வருகிற  திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.  தமிழக முதலமைச்சர் அவருடைய தொகுதியான எடப்பாடி பகுதிகளில் மேட்டூர் உபரி நீரை வறண்டு கிடக்கும் குளம், குட்டைகளுக்கு கொண்டு சென்றுள்ளார். அதைப்போல அந்தியூர் பகுதியில் இருக்கிற குளம், குட்டை, ஏரிகளுக்கு மேட்டூர் உபரி நீரைக் கொண்டு வருகிற திட்டத்தை நிறைவேற்ற தமிழக முதலமைச்சர் செயல்பட வேண்டும். 

 

 


கரோனா காலத்தில் மத்திய அரசின் உத்தரவை மதிக்காமல் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் வட்டி, அபராத வட்டியுடன் கடன் தொகையை கட்ட வலியுறுத்தி, வீடு வீடாகச் சென்று வேலையின்றி தவிக்கின்ற, வருமானம் இல்லாத இந்த சூழலில் உள்ள மக்களுக்கு இப்படிப்பட்ட ஒரு நெருக்கடியை பைனான்ஸ் நிறுவனங்கள் கொடுப்பது மக்களிடையே மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசின் உத்தரவை மதிக்காத இந்த நிறுவனங்கள் மீது மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து இந்த ஆறு மாத காலத்திற்கான வட்டி அபராத வட்டியை ரத்து செய்து சாதாரண மக்களின் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த நெருக்கடியை உடனே போக்க வேண்டும்" உள்ளிட்ட தீர்மானங்கள் அரசுக்கு கோரிக்கைகளாக வைக்கப்பட்டன. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் மாநாட்டிற்கான பொது அழைப்பு (படங்கள்)

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் 13-வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு வரும் ஜூன் மாதம் 7,8,9 நாட்களில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறுகிறது. ‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் ‘தி ரைஸ் டாவோஸ்’ மாநாட்டில் பங்கேற்றுப் பயன்பெற விரும்புவோர் www.tamilrise.org என்ற இணைய தளம் வழியாகவோ, +91 9150060032, +91 9150060035 எண்களுக்குத் தொடர்பு கொண்டோ பதிவு செய்யலாம். இம்மாதம் 31-ம் தேதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு 30% பதிவுக் கட்டணச் சலுகை தரப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. டாவோஸ் மாநாட்டிற்கான பொது அழைப்பு இன்று (06-03-24) வெளியிடப்பட்டது. இச்சந்திப்பில் 'தி ரைஸ்' அமைப்பின் நிறுவனர் தமிழ்ப் பணி ம. ஜெகத் கஸ்பர், அனைத்துலகத் தமிழ்ப் பொறியாளர் பேரவைத் தலைவர் திரு. கிருஷ்ணா ஜெகன், உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Next Story

தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
south indian artistes assoociation thanked tn government for new film city

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 19 ஆம் தேதி 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் சென்னை பூந்தமல்லியில் அதிநவீன திரைப்பட நகரம் அமைப்பதற்காக ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.  

தமிழக அரசு அறிவிப்பிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. அதில், “சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தமிழ்த் திரைத்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையான திரைப்பட நகரம் குறித்த அறிவிப்பில், சென்னையை ஒட்டி பூந்தமல்லியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ. 500 கோடி மதிப்பீட்டில் வி.எப்.எக்ஸ். அனிமேஷன் மற்றும் எல்.இ.டி கன்வர்ஷன் போன்ற நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்பு தளங்கள், புரொடக்சன் பணிகள் பிரிவு, 5 நட்சத்திர ஓட்டல் வசதிகளுடன் கூடிய கட்டமைப்புகள் மற்றும் சென்னை தீவுத்திடலில் இயற்கை வனப்புடன் கூடிய சமூக கட்டமைப்பு வசதிகளுடன் திறந்தவெளி திரையரங்கம் அமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது

தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் குறிப்பாகப் பெரிய படங்களின் படப்பிடிப்புகள் அண்டை மாநிலங்களில் நடப்பதால் இங்குள்ள நடிகர்கள் குறிப்பாகத் திரையுலக தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்கள் நலம் வளம் பெறும். ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப்பெரும் சினிமா நகரமாக திகழ்ந்து, வரலாறு படைத்திட்ட நகரமிது. காலத்தில் கரைந்து போன அச்சரித்திரத்தை மீட்டெடுக்கும் திட்டமிது. தமிழ்த் திரைப்படங்களை உலக வரைபடத்தில் அழுத்தமாக பதிவதற்கு ஊக்கம் தந்து, படைப்பாளிகளின் கனவுலகத்தை மேலும் விரியச் செய்கின்ற திட்டமிது. தமிழ்த் திரையுலகின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.