Mettur dam water opening decrease

Advertisment

டெல்டாபாசனத்திற்கு கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், நேற்றுவரை (09.07.2021) மேட்டூர் அணையில் பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு 12 ஆயிரம் கனஅடி என இருந்த நிலையில், தற்போது நீர்திறப்பு8 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

பாசனத்திற்குநீர் திறக்கப்பட்டுவந்த நிலையில், நாள் ஒன்றுக்கு அணையின் நீர்மட்டம் ஒரு அடி அளவிற்கு குறைந்துவந்தது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் நீர் இருப்பு 36.97 டிஎம்சி ஆக குறைந்ததால் நீர் திறப்பு என்பது தற்போது 8 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெல்டா மாவட்டங்களில் சில நாட்களாக மழை பெய்துவருவதால் பாசன தேவை என்பது குறைந்துவருகிறது இதன் காரணமாகவும்மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.