
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழைபெய்தநிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துவந்தது. இதன்காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியிலிருந்து 55 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. வரும் 55 ஆயிரம் கனஅடி நீரும் உபரிநீராக அப்படியேவெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக நீடிக்கும் நிலையில், அணையின் நீர் இருப்பு 93.63 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் அணையிலிருந்துகிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கான தண்ணீர் திறப்பு 500 கனஅடியாக இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு காவிரியிலிருந்து வரும் நீர்வரத்து 57 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)