Mettur dam water level exceeds 47,000 cubic feet!

சுமார் 65 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 47,436 கனஅடியாக உள்ளது.

Advertisment

வழக்கமாக ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழைத் தொடங்கிய பிறகே, காவிரி ஆற்றில் அதிகளவு நீர்வரத்து காணப்படும். ஆனால், தற்போது கேரளா, கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.

Advertisment

அந்த வகையில், தற்போது கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வினாடிக்கு 40,000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து உயர்ந்து வருவதால், விவசாயிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். 1957- ஆம் ஆண்டுக்கு பிறகு கோடைக் காலமான மே மாதத்தில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 47,436 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.