Mettur Dam scored a hat-trick on New Year's Day

நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக அண்மையில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி இருந்தது. 2024 ஆண்டு இரண்டு முறை மேட்டூர் அணை முழுகொள்ளளவான 120 அடியை எட்டி இருந்தது.

Advertisment

இந்நிலையில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. நடப்பாண்டில் 133 நாட்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. அதேநேரம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 2,875 கனஅடியில் இருந்து 1,791 கன அடியாக குறைந்துள்ளது. பாசன தேவைக்காக 1,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Advertisment