
மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாகக் கன மழை பொழிந்து வந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாகச் சேலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 119 அடி நிரம்பியிருந்த மேட்டூர் அணை இரண்டு, மூன்று நாட்களில் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என பொதுப்பணித்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில் மேட்டூர் அணை நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்குத் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 88 ஆண்டுகளில் 41வது ஆண்டாக அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)