Advertisment

இன்று திறக்கப்படுகிறது மேட்டூர் அணை... 3.50 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி என இலக்கு! 

Mettur Dam opens today ... Target to cultivate 3.50 lakh acres!

Advertisment

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (12.06.2021) திறந்துவைக்கக்கிறார். திருச்சி, தஞ்சை, சேலம் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள முதல்வர் திட்டமிட்டிருந்தார். அதனடிப்படையில் நேற்று தஞ்சை கல்லணையில் ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் கடைமடை பகுதிக்குத் தண்ணீர் செல்வதற்காக தூர்வாரப்படும் இடங்களையும் முதல்வர் ஆய்வு செய்தார். இந்நிலையில், இன்று காலை 10 மணி அளவில் மேட்டூர் அணையை டெல்டா பாசனத்திற்காக திறந்துவைக்கிறார் மு.க. ஸ்டாலின்.

இதனால் மேட்டூர் அணையை திறக்கும் முதல் திமுக முதல்வர் என்ற பெருமையை ஸ்டாலின் பெறகிறார். மேட்டூர் அணையை அமைச்சர்கள் திறந்து வந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு அதிமுகவின் முதல் முதல்வராக எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையை திறந்து வைத்திருந்தார். இந்நிலையில் திமுகவின் முதல் முதல்வராக ஸ்டாலின் மேட்டூர் அணையை இன்று திறக்க இருக்கிறார்.

அந்தத் தண்ணீரானது அடுத்த மூன்று நாட்களில் திருச்சிக்கும் அதற்கடுத்த நாளில் தஞ்சைக்கும் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி தொடரும். தற்போது டெல்டா மாவட்டங்களில், தஞ்சாவூரில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ஏக்கரும், திருவாரூரில் 87,700ஏக்கரும், நாகையில் 4,500 ஏக்கரும், மயிலாடுதுறையில் 96,800 ஏக்கரும், திருச்சியில் 10,600 ஏக்கரும், அரியலூரில் 4,900 ஏக்கரும், கடலூரில் 40,500 ஏக்கருக்குஎனமொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்வதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

delta farmers Tamilnadu Mettur Dam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe