Skip to main content

மேட்டூர், முல்லைப்பெரியாறு அணைகளின் நிலவரம்!

Published on 09/02/2020 | Edited on 09/02/2020

 

mettur dam, mullai periyar dam water level

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 127 கனஅடியாகவும், அணையின் நீர்மட்டம் 106.58 அடியாகவும் இருக்கிறது. மேலும் அணையின் நீர் இருப்பு 73.63 டி.எம்.சியாக உள்ளது. அதேபோல் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.50 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 1,667 மில்லியன் கனஅடியாகவும் இருக்கிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 200 கனஅடியாக உள்ளது. மேலும் அணையிலிருந்து வினாடிக்கு 300 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

136 அடியை தொட்ட முல்லை பெரியாறு; முதல் கட்ட எச்சரிக்கை விடுப்பு

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

 Mullai Periyar who touched 136 feet; First stage warning leave

 

முல்லை பெரியாறு அணை 136 அடியை எட்டியதை அடுத்து முதல் கட்ட அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 

வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழைபொழிந்து வருகிறது. நீர் நிலைகளும் நிரம்பி வருகிறது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பொழிந்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. இதனை அடுத்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நிர்வாகத்திற்கு தமிழக நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து அணை 138 அடியை எட்டியதும் இரண்டாம் கட்ட எச்சரிக்கையும், 140 அடியை எட்டியதும் மூன்றாம் கட்ட எச்சரிக்கையும் மற்றும் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். தொடர்ந்து அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு முதல் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகப் பகுதிக்கு 1000 கன அடிக்கும் மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தமிழக பொதுப்பணித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

 

 

Next Story

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கார் பார்க்கிங் விவகாரம்; உச்ச நீதிமன்றம் அதிரடி

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

Car parking issue in Mullaip Periyar dam area; The Supreme Court is in action

 

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கார் பார்க்கிங் அமைப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

 

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும். இது குறித்து இரு மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும்” என தெரிவித்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.