Advertisment

மேட்டுப்பாளையம் கொள்ளை சம்பவம்.. சிக்கிய குற்றவாளிகள்..! 

Mettupalayam robbery incident .. Trapped criminals

Advertisment

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோத்தகிரி சாலையில் உள்ள ஓடந்துறை பகுதியில் மகாதேவபுரத்தைச் சார்ந்த ரெஜிஸ் என்பவர் ஒரு கடை நடத்திவருகிறார். இவர், கடந்த 2ஆம் தேதி கடையை பூட்டிவிட்டு அவசர வேலையாக வெளியூர் சென்றுவிட்டார்.

இந்த நிலையில், நேற்று மாலை ரெஜிஸ் கடையினை வந்து பார்த்த பொழுது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கடையில் வைத்திருந்த பொருட்களும், கல்லாவில் இருந்த ரூ.7500 பணத்தையும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து ரெஜிஸ் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் உதவி ஆய்வாளர் செல்வநாயகம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

Mettupalayam robbery incident .. Trapped criminals

Advertisment

அதன் மூலம், இயேசுதுறை சந்து பகுதியைச் சேர்ந்த உமர் பாரூக் (22),ஆனந்தகுமார் (29) உள்ளிட்ட இருவரை கைது செய்தனர். பின்னர்,அவர்களிடமிருந்து பொருட்கள் மற்றும் பணம் மீட்கப்பட்டது.இதனையடுத்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Coimbatore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe