Skip to main content

மேட்டுப்பாளையத்தில் போராட்டக்காரர்களை அடித்து விரட்டியதால் பரபரப்பு...

Published on 02/12/2019 | Edited on 02/12/2019

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் என்ற இடத்தில் ஏடி காலனியில் இருக்கும் 4 வீடுகள் மீது அருகிலிருந்த சுவர் அதிகாலை 3 மணியளவில் சரிந்து விழுந்ததில் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்களில் 17‌ பேர் இடிபாடுகளில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

 

mettupalayam protest

 

 

7 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட உயிரிழந்த 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு, உடற்கூராய்வுக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் உயிரிழந்த 17 பேரின் குடும்பங்களுக்கும் இழப்பீட்டு தொகையாக ரூ.25 வழங்க வேண்டும், குடும்பத்தில் யாருக்காவது அரசு வேலை வழங்கவேண்டும், சுவரின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து தண்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சில அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக போலீசார் போராட்டக்காரர்களை அடித்து விரட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக எம்.எல்.ஏ மிரட்டல்; கண்ணீர் விட்டு அழுத பெண் கமிஷனர்

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
The woman commissioner burst into tears for AIADMK MLA threatened

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகராட்சி தலைவராக மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி என்பவரும், துணைத் தலைவராக அருள் வடிவு என்பவரும் பொறுப்பு வகித்து வருகின்றனர். 

இந்த நிலையில், மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்திற்கு அதிமுக எம்.எல்.ஏ ஏ.கே. செல்வராஜ் நேற்று (23-01-24) வந்தார். இதனையடுத்து, அவர் தனது ஆதரவாளர்களுடன் நகராட்சி ஆணையாளர் (கமிஷனர்) அமுதாவின் அறைக்குச் சென்று, அவரிடம் நகராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து கேள்வி கேட்டுள்ளார். அப்போது அவர், கமிஷனரை ஒருமையில் பேசி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனிடையே கமிஷனர் அமுதா, எம்.எல்.ஏ மிரட்டியதால் பயந்து அழுது கொண்டு இருந்துள்ளார்.

இந்நிலையில், வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு விழாவினைக் கொண்டாடுவது குறித்து பேசுவதற்காக நகராட்சி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டோர் கமிஷனர் அறைக்குச் சென்றுள்ளனர். அங்கு கமிஷனர் அமுதா அழுது கொண்டிருந்ததைப் பார்த்த நகராட்சி தலைவரும், துணைத் தலைவரும் கமிஷனரை சமாதானப்படுத்தி இருக்கையில் அமர வைத்துள்ளனர். அப்போது அதிமுக எம்.எல்.ஏ ஏ.கே. செல்வராஜ், ‘நான் பேசிக்கொண்டிருக்கும் போது நீ எதற்கு உள்ளே வந்தாய்?’ என நகராட்சி தலைவரையும், துணைத் தலைவரையும் ஒருமையில் பேசியுள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்த திமுக கவுன்சிலர்கள், அங்கு சென்று அதிமுக எம்.எல்.ஏ மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி அலுவலகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த டிஜிபி பாலாஜி, வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக மற்றும் திமுகவினரை சமாதானப்படுத்தினார். பின்னர், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனிடையே, மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் கமிஷனரை ஒருமையில் பேசி மிரட்டியதாக நகராட்சி ஊழியர்கள் புகார் அளித்தனர். ஒரு பெண் என்றும் பாராமல் ஒருமையில் பேசி மிரட்டிய அதிமுக எம்.எல்.ஏ.வால் நகராட்சி கமிஷனர் அழுத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Next Story

தொடர் கனமழை; மரம் விழுந்து அரசுப் பேருந்து சேதம்!

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

Continuous heavy rain; A government bus was damaged by a falling tree

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதன் காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. காந்திபுரம் பகுதியில் ராட்சத பாறைகள் மற்றும் மண் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மேட்டுப்பாளையம் - குன்னூர் ரயில் பாதையில் ராட்சத பாறைகள் விழுந்துள்ளது. மேலும் 4க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் மண் சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரிக்கு தமிழக போக்குவரத்துக் கழக அரசுப் பேருந்து ஒன்று துஞ்சப்பனை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது அங்கு மண் சரிவு ஏற்பட்டதால் சாலைகள் சேரும், சகதியுமாக இருந்துள்ளது. இதில் பேருந்து சிக்கிக் கொண்டது. இதனையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை சார்பில் மண் சரிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

 

Continuous heavy rain; A government bus was damaged by a falling tree

 

அதே சமயம் மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் பர்லியார் என்ற இடத்தில் பெய்த கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு மரம் விழுந்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக சொகுசு பேருந்து மீது மரம் விழுந்ததில் பேருந்து சேதமடைந்தது.