






Published on 02/09/2023 | Edited on 02/09/2023
மெரினா கடற்கரை அருகில் உள்ள கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை வரை சுமார் 29.1 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்காவது வழித்தட சேவைக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. கலங்கரை விளக்கத்திலிருந்து மயிலாப்பூர் கச்சேரி சாலை வழியாகத் திருமயிலை என்ற மயிலாப்பூர் வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குச் சுரங்கம் தோண்டும் பணியை பிளமிங்கோ என்ற எந்திரம் மூலம் சுரங்கம் தோண்டும் பணி தொடங்கியது.