Advertisment

சேலம், திருச்சியில் மெட்ரோ ரயில்; சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிப்பு

Metro trains in Salem Trichy Feasibility Report Submission

சேலம், திருச்சி, ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது குறித்த சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மதுரை, கோவையைத் தொடர்ந்து சேலம் திருச்சியில் மெட்ரோ வழித்தடங்கள் அமைப்பதற்கான ஆய்வுகள் நடந்து வந்தன. மேலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை பணிகள் முடிந்துள்ள நிலையில் மெட்ரோ நிறுவனம் சாத்தியக்கூறு அறிக்கையைதமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

Advertisment

அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில், திருச்சியில் 26 கி.மீக்கு தொலைவிற்கு ஒரு கட்டமாகவும், 19 கி.மீக்கு ஒரு கட்டமாகவும் என45 கி.மீ தூரத்திற்கு இரு கட்டங்களாக வழித்தடம் அமைக்க சாத்தியக்கூறு இருப்பதாக ஆய்வறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியைப் பொறுத்தவரை மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான வாய்ப்பு இல்லை என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் திருநெல்வேலியில் லைட் மெட்ரோ மட்டுமே அமைக்க முடியும் என அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கை அரசின் பரிசீலனைக்குப் பிறகு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கானஅனுமதியை அரசு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

thirunelveli Salem trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe