dmk protest

Advertisment

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. இதை தொடர்ந்து திமுக நான்காவது நாளாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில்மறியல்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 750க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தொண்டர்களும் மெட்ரோ ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்த தனசேகர், காசிமுத்துமாணிக்கம் உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

dmk protest

Advertisment

தற்போது போராட்டக்காரர்கள் சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் வளாகத்தில் நுழைய முயன்றதால் போலீஸாருக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசாரின்பேச்சுவார்த்தை கைகொடுக்காமல் போனதால் மாநகராட்சி பஸ்களில் போராட்டக்காரர்களை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இருப்பினும் போராட்டக்காரர்கள்பஸ்சில் எற மறுத்துமெட்ரோ ரயில் நிலையம் முன்னே போராட்ட முழக்கங்களைதொடர்ந்த வண்ணமே உள்ளனர்.