Metro administration responds to S. Venkatesh MP!

Advertisment

மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் 19.01.2022 அன்று மதுரை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் பற்றி எழுதியிருந்த கடிதத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமைப் பொது மேலாளர் ஆர்.எம்.கிருஷ்ணன் 05ஆம் தேதி பதில்அளித்துள்ளார்.

அதில், "மதுரையில் மெட்ரோ வெகு விரைவு போக்குவரத்து திட்டம் பற்றிய உங்கள் கடிதம் தொடர்பாக இப்பதில் தரப்படுகிறது. மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் ஆகிய இரண்டாம் தட்டு நகரங்களுக்கு மெட்ரோ வெகு விரைவு போக்குவரத்து திட்டம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறு ஆய்வு அறிக்கைக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு ஏற்கெனவே வழங்கியுள்ளது.

மதுரையில் மெட்ரோ வெகு விரைவு போக்குவரத்து திட்டம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறு ஆய்வு அறிக்கை தயாரிப்பதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கெனவே விடுக்கப்பட்டு அப்பணி பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிட்டெட் (கன்சல்டன்சி) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நடந்தேறி வருகிறது. இறுதி சாத்தியக் கூறு அறிக்கை மே 2022ல் தயாராகி விடுமென எதிர்பார்க்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வெங்கடேசன் எம்.பி., “மதுரை மக்களுக்கு நல்ல செய்தி. விரைவில் இப்பணி மேற்கொள்ளப்பட என்னுடைய இடையறா முயற்சிகள் தொடரும்’ என்று தெரிவித்திருக்கிறார்.