Advertisment

மேலும் 5 மாவட்டங்களில் மெட்ரோ; ஏப்ரல் மாதத்திற்குள் உறுதி

Metro in 5 more districts; Confirmed by April

Advertisment

திருச்சி, சேலம், நெல்லையில் மெட்ரோ அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுப்பணிகள் ஒரு சில மாதத்தில் இறுதி செய்யப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் முதல்கட்டமாக 54 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டில் உள்ளது. சென்னையைப் போல் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் மெட்ரோ ரயில் சேவைகளை கொண்டு வர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதன்படி, கோவை, மதுரை, சேலம், திருச்சி நெல்லையிலும் மெட்ரோ ரயில் சேவையை செயல்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

கோவையிலும், மதுரையிலும் ஆய்வுப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சேலம், திருச்சி நெல்லையில் மெட்ரோ திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வுப்பணிகள் வரும் ஏப்ரல் மே மாதங்களில் இறுதி செய்யப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் இறுதியில் தமிழ்நாடு அரசிடம் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Metro Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe