Methamphetamine near dump; two arrested

ராமநாதபுரத்தில் மெத்தபெட்டமைன் எனும் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ராமநாதபுரம் ஈசிஆர் சாலை குப்பைப் கிடங்கு அருகே மெத்தபெட்டமைன் எனும் போதைப்பொருளை இரண்டு இளைஞர்கள் விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்குசென்ற போலீசார் ஜெகதீசன், முகமது ஹரிஷ் என்று இருவரை கைது செய்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

Advertisment

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 35 லட்சம் ரூபாய் மதிப்புடைய 300 கிராம் மெத்தபெட்டமைன், செல்போன்கள், பாஸ்போர்ட், 45 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு இருவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் நேற்று சென்னை மாதாவரத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தபெட்டப்பட்டமைனைகடத்தி விற்ற ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர் போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் ராமநாதபுரத்திலும் இதேபோன்று மெத்தபெட்டமைன் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.