/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/imd-bala-sandal-shirt.jpg)
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதே சமயம் வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இன்று (03.12.2023) மாலை 5.30 மணி நிலவரப்படி மிக்ஜாம் புயல் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 210 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.
கடந்த 6 மணி நேரத்தில் இது மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து புயல் வடக்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. நாளை (04.12.2023)முற்பகல் வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் நிலைகொண்டு, பிறகு கரைக்கு இணையாக வடக்கு திசையில் நகர்ந்து, நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் கரையைக் கடக்கும். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)