/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/lowpressuren.jpg)
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதே சமயம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாக குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்துள்ளது.
இந்த நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் உருவான இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, மேலும் வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் அடுத்த 2 நாட்களில் தமிழக கடற்கரை நோக்கி நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தை நோக்கி வர வர, கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்கக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, டிசம்பர் 17, 18ஆம் தேதிகளில் தமிழகத்தில் உள்ள டெல்டா உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்திற்கு நாளை (17-12-24) மற்றும் நாளை மறுநாள் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)