தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதன் ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். அதே போல், தென் தமிழக பகுதிகளில் மேலே ஒரு வளிமண்டல கீழலடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி வரும் 12ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெற்ற வாய்ப்பு இருக்கிறது எனத் தகவல் தெரிவித்துள்ளது.