Advertisment

உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; தமிழகத்திற்கு காத்திருக்கும் மழை

The Meteorological Department has announced that there is a chance of rain in Tamil Nadu

Advertisment

தமிழகத்தில் அடுத்த 4 தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச்சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தியப் பெருங்கடலின் கிழக்குப்பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்குப்பகுதிகளில் நிலை கொண்டுள்ளதாகத்தெரிவித்துள்ளது.

இது அடுத்த இரு தினங்களில் மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடையக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 31 ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இதன்பின் பிப்ரவரி 1 ஆம் தேதி இலங்கை கடற்பகுதிகளைச்சென்றடையக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக 29 ஆம் தேதி வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில்லேசானதுமுதல் முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 30 ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் கூடியலேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானதுமுதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

rain Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe