Metal bracelet at Gangaikonda Cholapuram!

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேடு அகழ்வாராய்ச்சியின் போது உலோக வளையல் கண்டுபிடிக்கப்பட்டது. கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள தொல்லியல் தளத்தில் 2ம் சுற்று அகழ்வாராய்ச்சியில் கிடைத்த முதல் கண்டுபிடிப்பு இதுவாகும். சோழமாமன்னர் ராஜேந்திரசோழன் தெற்காசிய நாடுகளை வென்று அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தை தனது தலைமையாக கொண்டு ஆட்சி செய்தார். மாளிகைமேடு என்ற இடத்தில் சோழ மன்னர்களின் அரண்மனை கட்டப்பட்டு 250 ஆண்டுகள் சோழராஜ்யம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisment