திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியிலிருந்து பெரியகடை வீதி செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளத்தால் தொடர்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுவருவதாக காந்தி மார்க்கெட் வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துவாக்குடி வரை செல்லும் பேருந்து, கடந்த வாரங்களில் அந்தப் பள்ளத்தில் சிக்கி, நகர முடியாமல் பொதுமக்கள் இறங்கித் தள்ளியுள்ளனர்.
அந்தப் பள்ளத்தை மூடி சரிசெய்ய தொடர்ந்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், காந்தி மார்க்கெட் வியாபாரிகள்அந்தக் குழியை அவர்களே மண்ணால் நிரப்பி தற்காலிகமாக பள்ளத்தை மூடியுள்ளனர்.மேலும், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அந்தப் பள்ளத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.