Skip to main content

மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்

Published on 08/09/2021 | Edited on 08/09/2021

 

Merchants involved in the struggle before the corporation office

 

திருச்சி மாநகர தள்ளுவண்டி, தரைக்கடை, மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. இணைந்து இன்று மாநகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் தள்ளுவண்டி மற்றும் தரைக்கடை வியாபாரிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுபட்ட சாலையோர வியாபாரிகளைக் கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும். அடையாள அட்டை செல்லுபடியாகும் காலம் முடிந்தவர்களுக்கு அட்டையைப் புதுப்பித்துக் கொடுக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி திட்டம் அனைத்து வியாபாரிகளுக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 

 

சார்ந்த செய்திகள்