Skip to main content

நடராஜர் கோவிலில் தரிசனம்; சர்ச்சையான குடியரசுத் துணைத் தலைவரின் கையெழுத்து

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
mention of Vice President bharat in the Nataraja Temple is now controversial

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ஜனவரி 29ஆம் தேதி குடும்பத்தினருடன் 2 ஹெலிகாப்டரில் இந்திய நாட்டின் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்  சாமி தரிசனம் செய்ய வந்தார். இவருக்கு நடராஜர் கோவிலில் உள்ள தீட்சிதர்கள் வரவேற்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகளை செய்தனர்.

இவர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபையில் மேல் சட்டையை கழட்டி விட்டு சாமி தரிசனம் செய்தார். இவருடன் இவரது குடும்பத்தினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த அவர் தீட்சிதர்களின் அலுவலகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு வைக்கப்பட்டுள்ள கையேட்டில் இவர் நடராஜர் கோவிலில் தரிசனம் செய்தது பிரசித்தி பெற்றதாக உள்ளது என்றும் மகிழ்ச்சி அடைவதாகவும் பதிவு செய்து அவரது பெயருடன் பாரத் குடியரசு துணைத் தலைவர் என கையெழுத்திட்டுள்ளார்.

இது அனைவர் மத்தியிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இந்திய நாட்டின் குடியரசு துணைத் தலைவர் என அனைவராலும் மதிக்கப்படும் இவர் பாரத் நாடு என கையெழுத்திட்டு இருப்பது. பாஜக தலைவர் போல் நடந்து கொண்டுள்ளார் என அனைவர் மத்தியிலும் பேசப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்