Advertisment

மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு கரோனா தொற்று..! 

Corona infection mentally ill person ..!

தமிழகத்தில் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவிவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து அவை நடைமுறையில் உள்ளது.

Advertisment

இந்நிலையில், திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட சுந்தர் என்பவர் ஊரடங்கு நேரத்தில் சுற்றித் திரிந்துவந்துள்ளார். அவரைப் பார்த்த மண்ணச்சநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிமுத்து, மனநல காப்பக அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள், மனநலம் பாதிக்கப்பட்ட நபருக்கு மயக்க ஊசி செலுத்தி அவரை பிடித்து பரிசோதனை செய்துள்ளனர்.

அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisment

corona virus trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe