Advertisment

கழிவுநீர் கால்வாயில் வாலிபரின் சடலம்; காட்பாடியில் பரபரப்பு

Mentally challenged youth passed away in katpadi

வேலூர் மாவட்டம் காட்பாடி குடியாத்தம் செல்லும் சாலையில் காட்பாடி தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள கழிவுநீர் கால்வாய் புதரில் இறந்த நிலையில் வாலிபர் உடல் இருப்பதாக காட்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற காட்பாடி உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அங்கிருந்தப்புதரில் இருந்த வாலிபர் சடலத்தை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குபிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் .

Advertisment

இச்சம்பவம் குறித்து தாராபடவேடு கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துபோலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் இறந்த நபர் அப்பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டு யாசகம் பெற்று வந்ததாகவும் அவர்தான் இறந்தவர் எனக் கூறப்படுகிறது.

Advertisment

இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்த நபர்? என்றும், இவர் எப்படி இறந்தார், கொலையா? தற்கொலையா எனப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சாலையில் சுற்றுபவர்களைக் கண்டறிந்து அவர்களை அதற்கான விடுதியில் சேர்க்க வேண்டும் எனச்சமூக ஆர்வலர்கள் குரல்எழுப்பியுள்ளனர்.

katpadi police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe