Advertisment

'மாணவர்களின் மனநிலையே மாறிவிட்டது'-பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் கொடுத்த அன்பில் மகேஷ்    

nn

சேலத்தில் நடைபெற்ற 'நம் பள்ளி நம் பெருமை' நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அப்பொழுதுபேசிய அவர், ''குழந்தைகளின் நடவடிக்கையில் ஏதாவது ஒரு சின்ன மாற்றம் தெரிந்தாலும் உடனடியாக எஸ்எம்சி தலைவர் அல்லது மெம்பர் மூலமாக இங்குள்ள ஆசிரியர்களிடம் கொண்டு வர வேண்டும். என் பிள்ளை என்னவென்றே தெரியவில்லை இரண்டு நாளாக டல்லாகவே இருக்கிறான், சோகமாக இருக்கிறான் என்றால் தயவுசெய்து எப்பொழுதும் இருப்பதைப்போல் இருப்பதாக நினைக்காதீர்கள். காலங்கள் மாறிவிட்டது. நாம சின்ன பிள்ளையாக இருக்கும் போது படித்ததை போல நினைத்து கொள்ளாதீர்கள். இப்பொழுது மாணவர்களின் மனநிலையே மாறிவிட்டது. குறிப்பாக கொரோனாவுக்கு பிறகு நிறையவே மாற்றம் வந்துவிட்டது.

Advertisment

பெரியவர்களே சில நேரங்களில் சின்னப்பிள்ளைகள் போல் நடந்து கொள்கின்றனர்.மனரீதியாக நாமளும் பாதிக்கப்பட்டுள்ளோம். பிள்ளைகளிடம் மாற்றம் இருக்கிறது; ஏதாவது சந்தேகம் இருக்கின்றது என்று சொன்னால்பெற்றோர்களுக்கு தெரியாமல் வேறு யாருக்குத் தெரியப்போகிறது. உடனடியாக தலைமை ஆசிரியரிடம் தனிப்பட்ட முறையில் சந்தித்து அல்லது வகுப்பு ஆசிரியரை தனியாக சந்தித்து 'கிளாஸ் ரூமில் எப்படி இருக்கிறார்கள்' என்று கவனியுங்கள் எனநீங்களும் சொல்லுங்கள். உங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளுங்கள்'' என்றார்.

Advertisment
Salem education schools
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe