style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
திருச்செந்தூர் அருகே ஆலந்தலை மீனவ கிராமத்தை அடுத்த கல்லாமொழி கிராம கடற்கரையில் புதிய அனல் மின் நிலையத்திற்கான நிலக்கரி இறங்குதளம் மற்றும் கடலுக்குள் பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலந்தலை கிராம மீனவமக்கள் கடலுக்குள் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
காங்கிரஸ் ஆட்சியின் பொழுது 2009ல் மத்திய அமைச்சராக இருந்து ஜெய்ராம் ரமேஷ் உடன்குடியில் 800 மெகாவாட் மின்திறனுடன் இரு அலகுகள் கொண்ட ‘உடன்குடி பவர் கார்ப்பரேசன்’’ என்ற அனல் மின் நிலையம் நிறுவ அடிக்கல் நாட்டினார். அத்தோடு கிடப்பில் போடப்பட்ட அத்திட்டம் 2018 கடந்த ஜனவரி 29ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரூ.7,259 கோடி மதிப்பீட்டில் காணொலி காட்சி மூலம் மறுபடியும் அடிக்கல் நாட்டினார். இந்த அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி கொண்டு வர குலசேகரன்பட்டினம் அருகே கல்லாமொழி கடற்கரைப் பகுதியிலிருந்து 8 கி.மீ. தூரத்திற்கு கடலில் பாலம் அமைத்து நிலக்கரி இறங்கு தளம் அமைக்கப்பட்டது. நிலக்கரி துறைமுகம் அமைய இருக்கும் பகுதியோ 365 கி.மீ. நீளமுள்ள மன்னார் வளைகுடாவின் அரசு கடற்கரை ஒழுங்காற்று விதி பிரிவு 5ல் பாதுகாக்கப்பட்ட பகுதி. அதாவது பவளப்பாறைகள், சாலமீன் உள்ளிட்ட அரிய வகை உயிரிகள் இருக்கும் உயிர்க்கோளப் பகுதி. இதனை எதிர்த்துபலமுறை மாவட்ட நிர்வாகத்திடமும், முதல்வரிடமும் புகார் மனு கொடுத்தும் எந்த அசைவும் ஏற்படவில்லை.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இதனைக் கண்டித்து இன்று, ஆலந்தலை கிராம மீனவ மக்கள் தங்களின் 170 க்கும் மேற்பட்ட படகுகளை கடலுக்குள் செல்லாது காலவரையற்ற போராட்டத்தினை துவக்கி வைத்து விட்டு, பெண்கள் மனிதசங்கிலியாய் கைகோர்த்து கரையிலும், ஆண்கள் கடலுக்குள் இறங்கி மனித சங்கிலியாய் கைகோர்த்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். சம்பவத்தினை அறிந்த காவல்துறையும், வருவாய்துறையும் மீனவ மக்களிடம் பேச்சு வார்த்தையை துவக்கியுள்ளது. எனினும் இவர்களுக்கு ஆதரவாக குலசேகரப்பட்டிணம், பெரியதாழை, புன்னைக்கயல், மணப்பாடு, அமலி நகர், சிங்கித்துறை, கொம்புத்துறை மற்றும் திரேஸ்புரம் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் மீதமுள்ள 26 மீனவக் கிராமங்களும் போராட்டத்திற்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.