பத்திரிகை நண்பர்கள் நலச்சங்கம் சார்பில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற நினைவஞ்சலி கூட்டத்தில் கரோனா பாதிப்பில் உயிரிழந்த ராஜ் டி.வி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் படத்திற்கு மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வேல்முருகன் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ 20 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும், மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதற்கட்டமாக விருத்தாசலம் பத்திரிகை நண்பர்கள் நலச்சங்கம் சார்பில் வேல்முருகன்குடும்பத்திற்கு 5000 ரூபாய் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.