Advertisment

பணியின்போது இறந்த காவலர்களுக்கு அஞ்சலி

memorial tribute was paid police Trichy

இந்தியா முழுவதும் இன்று காவலர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.பணியின்போது கொல்லப்பட்ட மற்றும் இறந்த காவலர்களுக்கு திருச்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

Advertisment

memorial tribute was paid police Trichy

இதில் மத்திய மண்டல ஐ.ஜி திரு. சந்தோஷ் குமார்,திருச்சி மாநகர கமிஷனர் கார்த்திகேயன் ஐ.பி.எஸ் , திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் திரு. சரவண சுந்தர் ஐ.பி.எஸ், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுஜித் குமார் ஐ.பி.எஸ்,மாநகர காவல் துறையை சேர்ந்த ஆணையர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டனர். 66 குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து, பணியில் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. கடந்த வருடம் பணியின்போது திருச்சி மாவட்டத்தில் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் மற்றும் தமிழக காவல்துறையில் இரண்டு நபர்கள் உள்பட தேசிய அளவில் மொத்தம் 264 நபர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisment

police trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe