திராவிட இயக்கத்தின் சிறந்த ஆய்வாளர் சின்னக்குத்தூசியாரின்  நினைவு தினம்..!

 Memorial Day of Chinnakuttusiyar

திராவிட இயக்கத்தின் சிறந்த ஆய்வாளர் சின்னக்குத்தூசியார் அவர்களின் நினைவு தினம் (22.05.2021) இன்று. அய்யாவின் நினைவு தினத்தை முன்னிட்டு திருவாரூர் கலைஞர் நற்பணி மன்றம் சார்பில்--அய்யாவின் திருவுருவப்படத்திற்கு மன்றத் தலைவர் S.N.அசோகன் தலைமையில் திருவாரூர் வர்த்தகர் சங்க துணைத்தலைவர் பாலசுப்பிரமணியம் மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்.

 Memorial Day of Chinnakuttusiyar

அவரைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் மலரஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தினார்கள்.

 Memorial Day of Chinnakuttusiyar

இந்நிகழ்வில் தி.மு.க.வர்த்தகர் அணி திருவாரூர் நகராட்சி அமைப்பாளர் வாரை.வீரபாண்டியன், திருவாரூர் தமிழ்ச்சங்க செயலாளர் செ.அறிவு, பாரதி நற்பணி மன்றம் M.G.ராஜராஜன், கலைஞர் நற்பணி மன்ற பொறுப்பாளர்கள் வை.பரிதிச்செல்வன் கல்யாணசுந்தரம்,ராமகிருஷ்ணன்,தியாகராஜன், கலியபெருமாள்,ராஜராஜ சோழன், குப்புசாமி, தெட்சிணாமூர்த்தி, தி.மு.க.திருவாரூர் நகர 18வது வார்டு செயலாளர் ராஜேந்திரன், 16வது வார்டு இளைஞரணி துணை அமைப்பாளர் கோபி, சிகரம் கம்யூனிகேஷன் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

chinna kuthusi
இதையும் படியுங்கள்
Subscribe