memorial cm palanisamy tamilnadu

திருச்சி மாவட்டத்தில் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் கட்ட சென்னை தலைமைச் செயலகத்தில் காணொளிகாட்சி மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதேபோல் சர்.பி.டி. பன்னீர்செல்வம் மணிமண்டபம், தியாகராஜ பாகவதர் மணிமண்டபத்திற்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். மூன்று பேருக்கும் திருச்சியில் முழு உருவச் சிலையுடன் ரூபாய் 1.85 கோடியில் மணிமண்டபங்கள் கட்டப்படுகின்றன.

Advertisment

memorial cm palanisamy tamilnadu

மேலும் குமரி தேரூரில் கவிமணி தேசியவிநாயகம் பிள்ளைக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபத்திற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர், நாமக்கல் ஜேடர்பாளையத்தில் அல்லாள இளைய நாயகருக்கும் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டினார். ரூபாய் 13.62 கோடியில் கட்டப்பட்ட காவல், தீயணைப்புத்துறை கட்டடங்களையும் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

Advertisment

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், காவல்துறை அதிகாரிகள், துறைசார்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.