Advertisment

வழக்கறிஞர்கள் சங்கத்திற்கான தேர்தல்; ஜனநாயக முறைப்படி வாக்களித்த உறுப்பினர்கள்!

Members who voted democratically on Election to the Bar Association

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வழக்கறிஞர்கள் சங்கத்திற்கான தேர்தல் நேற்று (01-05-24) நடைபெற்றது. 360 உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்தச் சங்கத்திற்கு கள்ளக்குறிச்சி நீதிமன்ற வளாகத்தில் நேற்று காலை விறுவிறுப்பான தேர்தல் நடைபெற்றது.

Advertisment

தலைவர், துணைத் தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், பொருளாளர் ஆகிய 5 பதவிகளுக்கான போட்டியில் ஓட்டுப் பெட்டி வைத்து தேர்தல் நடைபெற்றது. இதில், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வழக்கறிஞர்கள் வரிசையில் வந்து நின்று ஜனநாயக முறைப்படி தங்களுடைய சங்கத்தின் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வாக்களித்தனர். தேர்தலில் பதிவான வாக்குகள் அன்று மாலையிலேயே எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்கள் அறிவிக்க பட்டனர். இதில் தலைவர், செயலாளர் போன்ற முக்கிய பதவிகளுக்கு தி.மு.க, அ.தி.மு.க போன்ற பிரதான கட்சிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போட்டியிட்டனர்.

Advertisment

இந்தத் தேர்தலில் சங்கத் தலைவராக என்.கே.சேகர், செயலாளராக ஏ.பழனிவேல், பொருளாளராக ஏ.ஆர்.இளையராஜா ஆகியோரும் துணைத் தலைவராக ஜெயமுருகன், இணைச் செயலாளராக ஆர்.இளையராஜா, ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெற்றி பெற்றவர்கள், மற்ற வழக்கறிஞர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். வழக்கறிஞர்கள் தேர்தல் கள்ளக்குறிச்சி பரபரப்பாக நடைபெற்றது.

Election lawyers kallakurichi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe