Member of the Legislative Assembly who provided tables and seats for the Government Women's College!

விழுப்புரம் மாவட்டம், சாலாமேட்டில் டாக்டர் எம்.ஜி.ஆர். மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 1,000- க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், மாணவிகளுக்கு தேவையான இருக்கைகள், மேஜைகள் பற்றாக்குறையாக இருந்த நிலையில், கல்லூரி நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டதன் பேரில், விழுப்புரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் லட்சுமணன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 11,17,500 மதிப்பிலான 150 இருக்கைகள் மற்றும் 150 மேஜைகளை வழங்கினார்.

Advertisment

கல்லூரி வளாகத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், மேஜைகள், இருக்கைகளை வழங்க கல்லூரி முதல்வர் கணேசன் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினருக்கு மாணவிகள், பேராசிரியர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும், மாணவிகள் பலர் சட்டமன்ற உறுப்பினருடன் செல்ஃபி புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

Advertisment

இந்நிகழ்ச்சியில், நகரமன்ற உறுப்பினர்கள் புருஷோத்தமன், மணவாளன், சாந்தராஜ், கல்லூரி பேராசிரியர்கள் ரவிசங்கர், தாமோதிரன், செல்வராணி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.