Skip to main content

வாக்களிக்க மேல்பாதி தலித்துகள் அச்சம்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
Melpathi Dalit's fear to vote

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான தர்மராஜா, திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த ஆண்டு நடந்த தீமிதி திருவிழாவின் போது, சாமி தரிசனம் செய்ய அப்பகுதியைச் சேர்ந்த தலித் மக்கள் சென்றனர். அப்போது பெரும்பான்மை சமூகத்தினர், அவர்களை கோயிலுக்குள் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி மிரட்டினர். இதனால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து பட்டியலின அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பொன்முடி உறுதி தந்தார். இதனை அறிந்த பெரும்பான்மைப் பிரிவைச் சேர்ந்த மக்கள் கோயிலில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அங்கு சென்றனர். அப்போது அவர்கள் தங்களின் சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அரசு அடையாள அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நடந்துகொண்டு இருக்கும்போதே பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி அதில் இருந்த சிலர் தங்கள் கையிலிருந்த மண்ணெண்ணெய்யை தங்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனடியாக அங்கிருந்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த அந்த மண்ணெண்ணெய் பாட்டில்களைப் பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அவர்களைக் காப்பாற்றினர். 

Melpathi Dalit's fear to vote

இரு தரப்பினரும் அங்கு போராட்டம் போராட்டம் நடத்தியதால் யாரும் கோயிலுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படவே, இருதரப்பினருக்கு இடையே பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்பட்டு அது தோல்வியில் முடிந்தது. இதனால், வருவாய் கோட்டாட்சியர் திரௌபதி அம்மன் கோவிலுக்கு சீல் வைத்தார்.

பிறகு எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி, பொதுமக்களை கோயிலினுள் அனுமதிக்காமல், கோயிலை திறப்பதற்கும், அறநிலையத் துறை சார்பில் நியமிக்கப்படும் பூசாரியைக் கொண்டு ஒரு கால பூஜை நடத்துவதற்கும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி கோயில் திறக்கப்பட்டு, அங்கு ஒரு கால பூஜை மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க தங்களுக்கு தனி வாக்குச்சாவடி வேண்டும் என மேல்பாதி பகுதியில் உள்ள தலித் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

இதுதொடர்பாக மேல்பாதி பகுதியில் வசித்துவரும் தலித் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், “எந்த சமயத்திலும், பிரச்சனையை உருவாக்க பெரும்பான்மை சமூகத்தினர் காத்திருக்கின்றனர். பெரும்பான்மை சமூகத்தினர் எந்த சமயத்திலும் பிரச்சனையை ஏற்படுத்தலாம். மேல்பாதி கிராமத்திற்கான வாக்குச் சாவடி என்பது பெரும்பான்மை மக்கள் இருக்கும் பகுதியில் அமைந்துள்ளது. எனவே அங்கு சென்று வாக்கு அளிக்க எங்களுக்கு அச்சமாக உள்ளது. எனவே எங்களுக்கு தனியாக வாக்குச் சாவடி அமைத்து தர வேண்டும்” என கோரியுள்ளனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்கட்ட வாக்குப்பதிவு; ஏற்பாடுகள் தீவிரம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
First Phase Voting; Preparations are intense

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. அதாவது தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாளில் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முதற்கட்ட தேர்தலில் தமிழகத்தின் 950 வேட்பாளர்கள் உள்பட 1,625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த முதல் கட்ட தேர்தலில் மத்திய அமைச்சர்களான நிதின் கட்கரி, கிரன் ரிஜிஜு, எல். முருகன், ஜிதேந்திர சிங், சர்வானந்த் சோனோவால், அர்ஜுன்ராம் மேக்வால் மற்றும் சஞ்சீவ் பல்யான் என 8 பேர் போட்டியில் உள்ளனர். தெலங்கானாவின் முன்னாள் ஆளுநரும், புதுச்சேரியின் பொறுப்பு துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் களத்தில் உள்ளார். மேலும் திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேவ், அருணாசலப் பிரதேச முன்னாள் முதல்வர் நபம் துகி, தமிழகத்தின் முன்னாள முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

அதே சமயம் முதற்கட்ட தேர்தலுடன் தமிழகத்தின் விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நாளை நடைபெறுகிறது. இதே போன்று திரிபுரா மாநிலம் ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலும் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் 68 ஆயிரத்து 320 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் பதற்றமான 45 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா மூலம் தொடர்ந்து கண்காணிக்க தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிகவும் பதற்றமான 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகளில் நவீன ஆயுதங்களுடன் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சூழலில் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியும் தீவிரமடைந்துள்ளது. 

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது.