மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் இருந்த 13 பேர் முன்கூட்டியே விடுதலையான வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்து, உள்துறை அதிகாரிகளை நேரில் ஆஜராக கூறிய வழக்கு விசாரணை இன்று வந்தது.

Advertisment

 melavalavu case -court order to Tamil Nadu government

சிறைத்துறை டி.ஐ.ஜி, எஸ்.பி.மற்றும் அதிகாரிகள் ஆஜராகி இருந்தனர். கொலை வழக்கில் கைதானவர்களின் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ள நிலையில் தமிழக அரசு ஒரு அரசாணை மூலம் விடுவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்து இருந்தனர். சிறைத்துறை அதிகாரிகள் ஆஜராகி 13 பேர் விடுவிக்கப்பட்ட அரசாணையை தாக்கல் செய்தனர். இந்த அரசாணையை எதிர்த்து தாமாகவே முன்வந்து விடுதலை செய்யப்பட்ட13 பேரையும் எதிர் மனுதாரராக சேர்த்து நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த வெங்கடேஷ் அமர்வு வழக்கை விசாரித்தனர்.

இந்த வழக்கில் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள நிலையிலும், வன் கொடுமை தடுப்புச் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர், இதனை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யாதது ஏன் எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினர். 13 பேர் விடுதலை செய்யப்பட்ட அரசாணை எதன் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டது என தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

Advertisment

வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் -ஆனந்த வெங்கடேஷ் அமர்வு விசாரணையை நவம்பர் 25 க்கு ஒத்திவைப்பு.